வளர்ச்சி அடைந்த இந்தியா 2047: தீவிரமான வேலைகளை செய்து வரும் மோடி அரசு!

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2047-ம் ஆண்டிற்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நிலையை அடைவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய புள்ளியியல் அமைப்பை வலுப்படுத்தும் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, தரவு அடிப்படையிலான முடிவுகளை மேற்கொள்வதற்குப் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்த தரவுகள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
வளர்ச்சியை மதிப்பிடுவதற்கும், சமூக-பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும், மத்திய திட்ட செயலாக்க அமைச்சகம், சுகாதாரம், கல்வி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு சமூக-பொருளாதார அம்சங்களில் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில, யூனியன் பிரதேச அளவில் மாதிரி கணக்கெடுப்புகளை நடத்தியுள்ளது. கால தாமதத்தைக் குறைக்க, தரவு சேகரிப்புக்கான மாதிரி கணக்கெடுப்புகளை சரிபார்க்கும் நடைமுறைகளுடன் கூடிய டிஜிட்டல் தளங்களை அமைச்சகம் பயன்படுத்துகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி, நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் தொழில்துறை உற்பத்திக் குறியீடு போன்ற முக்கிய பொருளாதாரக் குறியீடுகளின் மதிப்பீடுகள் வெளியிடப்படுவதில் உள்ள காலதாமதம் குறைக்கப்பட்டுள்ளன.