Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியின் விக்சித் பாரத் 2047:பெங்களூர் மக்களே ஏர்-டாக்ஸி'யில் பறக்க தயாராகுங்கள்!

பிரதமர் மோடியின் விக்சித் பாரத் 2047:பெங்களூர் மக்களே ஏர்-டாக்ஸியில் பறக்க தயாராகுங்கள்!
X

SushmithaBy : Sushmitha

  |  5 April 2025 12:44 PM

பெங்களூருவை மையமாகக் கொண்ட ஏரோஸ்பேஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான Sarla Aviation, இந்தியாவின் மூன்று முக்கிய நகரங்களில் மின்சார Air Taxi சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த சேவைகள் முதலில் பெங்களூருவில் 2028 ஆம் ஆண்டு துவங்கி, பின்னர் மும்பை மற்றும் டெல்லிக்கு விரிவாக்கப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து Startup Mahakumbh 2025 நிகழ்வில், நிறுவனத்தின் CEO மற்றும் இணை நிறுவனர் அட்ரியன் ஷ்மிட் அறிவித்தார். இந்த முக்கிய முயற்சி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான விக்ஸித் பாரத் 2047 இன் நோக்குடன் இணைந்திருப்பதாக அவர் கூறினார்.

இந்தியா டுடே வெளியிட்ட செய்தியின்படி, Sarla Aviation, தனது Air Taxi சேவையை 2028-ஆம் ஆண்டுக்குள் பெங்களூருவில் துவக்கவுள்ளது. “இந்த சேவைகள் முதலில் பெங்களூருவில் துவங்கி, பிற பெருநகரங்களிலும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்,” என ஷ்மிட் தெரிவித்ததாக இந்தியா டுடே கூறியுள்ளது. சேவை அறிமுகமான ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவின் ஒவ்வொரு மூலையும் இந்த சேவை சென்றடையக்கூடியதாக இருக்கும் என Sarla Aviation நிறுவனம் எதிர்பார்க்கிறது. இது, இந்தியாவின் விமானப் போக்குவரத்து துறையில் புது வளர்ச்சியை ஊக்குவிக்கும் மத்திய அரசின் நோக்கத்துடன் பொருந்துகிறது.

Sarla Aviation - இன் Air Taxi க்கு ஷூன்யா என பெயரிடப்பட்டுள்ளது. இது ஆறுபேர் பயணிக்கக்கூடியதாகவும்,மொத்தம் 680 கிலோ எடையை ஏற்றக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேகம் 250 கிமீ/ வரை மணிக்கு செல்லும் திறன் உடைய இந்த மின்சார விமானம், 160 கிமீ வரையான தூரம் பறக்கக்கூடியது. ஆரம்பத்தில், 25 முதல் 30 கிமீ தூரத்துக்குள் உள்ள நகரப் பகுதிகளில் சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது போக்குவரத்து நெரிசலையும், மாசையும் குறைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.“ஷூன்யா என்பது வெறும் தொழில்நுட்ப சாதனை அல்ல, இது இந்தியாவின் நகரப்புற போக்குவரத்தை மாற்றும் நமது பார்வையின் வெளிப்பாடாகும்,”என The New Indian Express-இற்கு ஷ்மிட் தெரிவித்துள்ளார்.

இந்த முன்னோடி திட்டம், பிரதமர் மோடி அரசின் ஊக்கமளிக்கும் கொள்கைகளால் மலர்ந்துள்ள இந்திய ஸ்டார்ட்அப் சூழலால் சாத்தியமாகியுள்ளது. 2023-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி, தற்போது உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஸ்டார்ட்அப் சூழல் உள்ள நாடாக இந்தியா உயர்ந்துள்ளதாக கூறியிருந்தார்.“நமது கொள்கைகள் இளைஞர்களின் திறனை அதிகரிக்கின்றன. அதனால் இந்தியா இன்று உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் நாடாக மாறியுள்ளது,”என Times of India இதழின் விவரத்தில் அவர் கூறியிருந்தார்.

இந்தியா டுடே வெளியிட்ட மற்றொரு தகவலின்படி,2024 ஜனவரியில் 20 ஊழியர்களுடன் இருந்த Sarla Aviation, தற்போது 47 ஊழியர்களுடன் விரிவடைந்துள்ளது. இந்த ஆண்டு முடிவிற்குள் 80 முதல் 120 ஊழியர்கள் வரையிலும் வளர்ச்சியை எதிர்பார்க்கின்றனர். இந்த வளர்ச்சிக்கு, $10 மில்லியன் முதலீடு முக்கிய பங்காற்றியுள்ளது. இதில் இந்தியாவில் உள்ள முக்கிய Start up முதலீட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

TNIE வெளியிட்ட தகவலின்படி,“ஷூன்யா விமானத்தின் பாதுகாப்பையும் செலவு குறைக்கும் முயற்சிகளையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றோம். இது பறக்கும் டாக்ஸிகளை மக்கள் பயன்பாட்டுக்கேற்ப மாற்றும் நோக்கத்தில் உள்ளது,” என நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பிரீமியம் டாக்சி கட்டணத்திற்கே ஒப்பான விலையில் சேவை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, நகரப் பகுதிகளில் அவசர மருத்துவ சேவைக்காக இலவச ஏர் ஆம்புலன்ஸ் சேவையும் வழங்க திட்டமிட்டுள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News