Kathir News
Begin typing your search above and press return to search.

ஆட்சிக்கு வந்தால் ஜார்க்கண்டில் பெண்களுக்கு மாதம் 2,100 உதவித்தொகை- தேர்தல் அறிக்கை

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஜார்கண்டில் பெண்களுக்கு மாதம் 2,100 உதவித் தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டு அமித்ஷா கூறினார்.

ஆட்சிக்கு வந்தால் ஜார்க்கண்டில் பெண்களுக்கு மாதம் 2,100 உதவித்தொகை- தேர்தல் அறிக்கை
X

KarthigaBy : Karthiga

  |  4 Nov 2024 3:30 PM GMT

ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் இம்மாதம் 13 மற்றும் 20-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. இதையொட்டி பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அங்கு சென்றார்.தலைநகர் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் அமித் ஷா பேசியதாவது:-

ஜார்கண்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 21 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தலா ரூபாய் 2500 மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணுக்கும் ஆறு ஊட்டச்சத்து பரிசு பெட்டகங்களும் தலா ரூபாய் 21,000 நிதி உதவியும் அளிக்கப்படும். ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு மழலையர் கல்வி முதல் முதுகலை பட்டம் வரை இலவச கல்வி வழங்கப்படும். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 'கோகோ-தீதீ' திட்டத்தின் கீழ் மாதம் 2,100 உதவித்தொகை வழங்கப்படும்.

இளங்கலை முதுகலை கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு மாதம் தோறும் தலா ரூபாய் 2000 நிதி உதவி வழங்கப்படும். பெண்கள் பெயரில் ரூபாய் 50 லட்சம் வரை மதிப்புள்ள சொத்துக்களை ரூபாய் 1.முத்திரை கட்டணத்தில் பதிவு செய்யும் திட்டத்தை பா.ஜனதா அமல்படுத்தி வந்தது.அதை ஹேமந்த் சோரன் அரசு ரத்து செய்துவிட்டது. பாஜக ஆட்சிக்கு வந்தால் அத்திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். ஆட்சிக்கு வந்தால் ஜார்கண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். அதில் பழங்குடியினருக்கு விலக்கு அளிக்கப்படும். நாங்கள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தினாலும் பழங்குடியினரின் உரிமைகள் அவர்களுக்கான சட்டங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம். பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஜார்கண்ட் மாநிலத்தில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அவற்றில் 2 லட்சத்து 87 ஆயிரம் அரசு வேலை வாய்ப்புகள் ஆகும்.

ஹேமந்த் சோரன் அரசு ஊடுருவல்களுக்கு துணை போகிறது. ஊடுருவல் காரர்களால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலத்துக்கும் பெண்ணுக்கும் உணவிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. மாநிலத்தின் மக்கள் தொகையே மாறி வருகிறது. எனவே ஊடுருவல் காரர்கள் ஆக்கிரமித்த நிலம் பறிமுதல் செய்யப்படும்.இதற்காக கடுமையான சட்டம் கொண்டுவரப்படும். சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அடையாளம் காணப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். வங்காளதேச ஊடுருவல் காரர்களை நாடு கடத்துவோம் . 2027 ஆம் ஆண்டுக்குள் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆள் கடத்தலுக்கு முடிவு கட்டப்படும்.

போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்தது பற்றி சிபிஐ மற்றும் சிறப்பு விசாரணைக் குழு மூலம் விசாரணை நடத்தப்படும்.குற்றவாளிகள் சிறையில் தள்ளப்படுவார்கள். ஜார்கண்ட் மாநிலம் சூழலியல் சுற்றுலா மையமாக உருவாக்கப்படும். 10 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில் 70 வயதை கடந்தவர்களுக்கான இலவச மருத்துவ காப்பீடு ரூபாய் 5 லட்சத்திலிருந்து ரூபாய் 10 லட்சமாக உயர்த்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News