கோவையில் 2,340 போலி மது பாட்டில்கள் பறிமுதல் 3 பேர் கைது!

By : Bharathi Latha
அமலாக்கப் பிரிவு புலனாய்வுத் துறை மாநிலம் முழுவதும் சட்டவிரோத மதுபான வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த தொடர் நட வடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. அமலாக்கப் பிரிவு புலனாய்வு துறை. தமிழகத்தில் போதை பழக்கத்தை கட் டுப்படுத்த, தமிழ்நாடு மது விலக்கு சட்டத்தை மிகவும் உறுதியாக அமல்படுத்தி வருகிறது. முதன்மையாக, போலி மதுபானம் தயா ரிப்பு கூடங்கள், சட்ட விரோதமாக மதுபானங்கள் தயாரிக்கும் ஆலைகள், போலி மதுபான வர்த்தகம் பிற மாநில மதுபானங்கள் கடத்தல்களை தடுக்க தொடர் கண்காணிப்பு மற் றும் வேட்டைகள் நடத்தி வருகிறது.
அமலாக்கப் பிரிவு புல னாய்வுத் துறை தற்போது மிக நுணுக்கமான நுண்ண றிவு தகவல்களை சேக ரித்து, உடனடி மற்றும் தொடர் நடவடிக்கையால், சமீபத்தில் சென்னையில் இரண்டு போலி மதுபான ஆலைகள் கண்டறியப் பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக 06.03.2025 அன்று கோயம் புத்தூர் சிஜயூ ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான குழு திருப்பூர் மாவட்டம் செடம்பாளையம் சந்திப்பிற்கு அருகில், பல்லடம் மங்கலம் சாலையில் லாரியை ஒரு தடுத்து நிறுத்தியது. கிருஷ்ணகிரி மற்றும் சேலம் வழியாக கோயம்புத்தூருக்கு கொண்டு வரப்பட்ட போலி மதுபானக் சரக்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
