ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் 2.36 லட்சம் கோடி ரூபாய்:கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட புதிய உச்சம் பெற்ற ஜிஎஸ்டி வசூல்!

By : Sushmitha
கடந்த மாத ஏப்ரல் மாதம் பசுமையான ஜிஎஸ்டி கடந்தாண்டு ஏப்ரல் மாத வசூலை விட 12.6 சதவீதம் அதிகமாக வசூல் ஆகியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூபாய் 2.36 லட்சம் கோடி வசூலாகி உள்ளதாகவும் இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வசூலான ரூபாய் 2.10 லட்சம் கோடியை காட்டிலும் 12.6 சதவிகிதம் அதிகம் என்று தெரிவித்துள்ளது
மேலும் உள்நாட்டு பரிமாற்றம் மூலம் கிடைத்த வருமானம் 10.7 சதவீதம் அதிகரித்து 1.89 லட்சம் கோடி ரூபாயாகவும் இறக்குமதி மூலம் கிடைத்த வருமானம் 46,900 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது 2025ஆம் நிதியா ஆண்டில் ஜிஎஸ்டி வசூல் 9.5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர் மேலும் இது பொருளாதார நடவடிக்கைகள் மேம்பட்டு உள்ளதை காட்டியுள்ளதாகவும் கூறியுள்ளனர்
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜிஎஸ்டி மூலம் 11.8 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயத்துள்ளது
