ஓயாமல் அதிர்ச்சியைக் கொடுத்து சீனா : வவ்வால் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட 24 வகையான கொரோனா வைரஸ்!

By : Bharathi Latha
முதன்முதலாக சீனாவின் உள்ள உகான் நகரில் இருந்து பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகிறது. மேலும் தன்னுடைய உருமாறும் பண்புகளினால் பல்வேறு விதமாக மாற்றமடைந்து மக்களை பயத்தில் ஆழ்த்தி உள்ளது. உலகம் பல்வேறு அலைகளை ஏற்படுத்தி தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை கொரோனா வைரஸ்களை காடுகளில் இருந்து சேகரித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
வவ்வால்களிடம் இருந்து மொத்தம் 24 கொரோனா வைரஸ்களை கண்டுபிடித்ததாக சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். வவ்வால்கள் மூலம் பரவும் வைரஸ்கள் எத்தனை வகைகள் உள்ளன? என்பது குறித்தும் அதில் எத்தனை வகைகள் மனிதர்களுக்குப் பரவும் அபாயம் உள்ளது என்பது குறித்தும் கண்டறிய இது உதவும் எனச் சீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சாதாரணமாக விலங்குகளிடமிருந்து, மனிதர்களுக்கு ஒரு நோய் பரவுகிறது என்றால் அதில் அனைத்துமே இவ்வளவு தீவிரமாக இருக்காது. ஆனால் தற்போது இருக்கும் கொரோனா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் பொழுது அதிக தீவிரத்தை கொண்டுள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "வவ்வால்களில் இருந்து மொத்தமாக 24 கொரோனா வைரஸ்களை நாங்கள் சேகரித்துள்ளோம். அதில் 4 கொரோனா வகைகள் தற்போது பரவும் கொரோனா வைரசுக்கு ஒத்து இருந்தது" என அதில் தெரிவித்துள்ளனர். கடந்த 2019 மே மாதம் முதல் 2020 நவம்பர் மாதம் வரை சீனாவின் சிறிய காடுகளில் வசிக்கும் வவ்வால்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. வவ்வால்களின் எச்சில்களில் இருந்து இத்தகைய மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
