Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை விமான நிலையம்: 2416 கிராம் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!

சென்னை விமான நிலையம்: 2416 கிராம் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 Jun 2025 9:58 PM IST

2025 ஜூன் 12 அன்று இரவு தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவரை நம்பத்தகுந்த உளவுத் தகவல் அடிப்படையில் சென்னை சர்வதேச விமான நிலைய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்டனர். இதில் சந்தேகிக்கும் வகையில் இருந்த 5 பாக்கெட்டுகளில் தடைசெய்யப்பட்ட பச்சை நிறப் பொடி கண்டறியப்பட்டது. இது கஞ்சாவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு சோதனை செய்ததில் கஞ்சா என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 2416 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் அந்த பயணியை கைது செய்து ஆலந்தூர் தனி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். 2025 ஜூன் 10 அன்று இரவு தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவரை நம்பத்தகுந்த உளவுத் தகவல் அடிப்படையில் சென்னை சர்வதேச விமான நிலைய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்டனர். இதில் சந்தேகிக்கும் வகையில் இருந்த அவரது உணவு பொட்டலங்களை சோதனையிட்ட போது 6 பாக்கெட்டுகளில் 2800 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் அந்த பயணியை கைது செய்து ஆலந்தூர் தனி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். 2025 ஜூன் 3 அன்று விமான நிலைய ஆணையரகத்தில் தபால் மதிப்பீட்டு துறையில் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான பார்சல்களை ஸ்கேன் செய்த போது 2 பாக்கெட்களில் 1.022 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News