அடுத்த 25 ஆண்டுக்கான ரோட் மேப் ரெடி! உயரும் பாரதம் நிகழ்ச்சியில் பிரதமர் உரை!

உயரும் பாரதம் என்ற பெயரில் தனியார் செய்து தொலைக்காட்சி சார்பில் உச்சி மாநாடு ஒன்று நடைபெற்றது அதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஒட்டு மொத்த உலகமே 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது என்று நம்புகிறது, கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்களை அனைவரும் பார்க்கிறார்கள் இந்திய நாடு பத்தாண்டுகளில் என்ன சாதித்து இருக்கிறது என்பதை ஒட்டுமொத்த உலகமும் பார்க்கிறது.
இந்திய பொருளாதாரம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் பொழுது உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தை பெற்றது. மேலும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான ரோடு மேப்பையும் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏற்கனவே உருவாக்கியுள்ளது அதேபோன்று என்னுடைய மூன்றாவது ஆட்சி காலத்தில் முதல் 100 நாட்களுக்கான ப்ளூ பிரிண்ட்களும் தயாராக உள்ளது என்று பேசினார்.
இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் நாட்டில் உள்ள அனைத்து நடுத்தர மக்களுக்கும் வீடு வழங்கும் திட்டத்தை கொடுத்தது, இதுவரை 25 ஆயிரம் கோடி வீடு கட்டும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நடுத்தர குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக பெருமளவுத் தொகையை வெளிநாட்டு கல்விக்காக செலவழித்தனர் ஆனால் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கான வளாகங்கள் இந்தியாவிலேயே தற்போது அமைக்கப்பட்டுள்ளன! என்று பேசினார்.
Source : abp நாடு