Kathir News
Begin typing your search above and press return to search.

'நாட்டில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது பாஜக அரசு'- பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டில் சுமார் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளேன் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

நாட்டில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது பாஜக அரசு- பிரதமர் மோடி பெருமிதம்!
X

KarthigaBy : Karthiga

  |  17 April 2024 11:08 AM GMT

பீகார் மாநிலம் கயாவில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசினார் .அப்போது பிரதமர் மோடி பேசியதாவது :-

இந்த தேர்தலானது வளர்ந்த இந்தியாவுக்காகவும் பீகாரின் வளர்ச்சிக்காகவும் நடக்கிறது. நமது அரசியல் சாசனம் தூய்மையானது. சாசனத்தை உருவாக்கியவர்கள் வளர்ச்சியடைந்த இந்தியா குறித்து கனவு கண்டனர். ஆனால் பல ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியானது வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான வாய்ப்பை தவற விட்டுவிட்டது. அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அம்பேத்கர் மட்டும் இல்லாவிட்டால் ஏழை குடும்பத்தில் பிறந்த நான் நாட்டின் பிரதமராக இருக்க முடியாது.

மக்களின் ஆசையே எனக்கு இந்த பதவியை வழங்கியுள்ளது. பீகாரில் எதிர்க்கட்சிகளுக்கு எந்த கொள்கையும் இல்லை .அவர்கள் ஓட்டு சேகரிக்க சென்றால் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் செய்த பணிகளை கூறியே ஓட்டு கேட்கின்றனர். நிதீஷ்குமார் மற்றும் மத்திய அரசு செய்த பணிகளுக்கான பெருமைகளை எதிர்க்கட்சிகள் எடுத்துக் கொள்கின்றன. இதனை மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.ராஷ்ட்ரிய ஜனதா ஆட்சியில் ஊழல் செய்வது ஒரு தொழில் போல் எங்கும் பரவி இருந்தது.

அந்த அரசு பீகாரருக்கு கொடுத்தது இரண்டு தான். ஒன்று காட்டாட்சி. மற்றொன்று ஊழல் .கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஒரு புரட்சி நடந்துள்ளது. அது பற்றி பெரிய அளவில் யாரும் பேசப்படவும் இல்லை. விவாதிக்கப்படவும் இல்லை .சமூக நீதி என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியும் ராஷ்ட்ரி ஜனதா தளமும் அரசியல் செய்தனர். நாட்டில் உள்ள 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டு உள்ளேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


SOURCE :Dinaseithi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News