Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்தி ராமர் கோவில் 2500 ஆண்டுகள் நிலைத்து நிற்கும்- கட்டிட வடிவமைப்பாளர் சந்திரகாந்த் சோமபுரா மேலும் கூறியது என்ன?

அயோத்தி ராமர் கோவில் 2500 ஆண்டுகள் நிலைத்து இருக்கும் என்று கோவில் கட்டிட வடிவமைப்பாளர் சந்திரகாந்த் சோமபுரா கூறினார்.

அயோத்தி ராமர் கோவில் 2500 ஆண்டுகள் நிலைத்து நிற்கும்- கட்டிட வடிவமைப்பாளர் சந்திரகாந்த் சோமபுரா மேலும் கூறியது என்ன?

KarthigaBy : Karthiga

  |  26 Dec 2023 10:45 AM GMT

அயோத்தி கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கட்டிட வடிவமைப்பை குஜராத்தை சேர்ந்த சந்திரகாந்த சோம புறா என்பவர் தான் செய்து இருக்கிறார் அவருக்கு 80 வயது ஆகிறது அவரது மகன்கள் நிகழும் மற்றும் ஆகியோர் கண்காணிப்பில் தான் தற்போது கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது கோவில் கட்டுமானம் குறித்து சந்திரகாந்த சோமபுரா கூறியதாவது:-


ராமஜென்ம பூமியில் கோவில் கட்ட வேண்டும் அதற்கு வடிவமைப்பு செய்து தாருங்கள் என்று 1989 ஆம் ஆண்டு என்னிடம் கேட்டார்கள் .அதற்காக என்னை கோவில் வளாகத்திற்குள் அழைத்துச் சென்றார்கள் .அப்போது இங்கு ராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் கட்டிட அளவு எடுப்பதற்கான உபகரணங்கள், பேனா, பென்சில் ,பேப்பர் என எந்த பொருள்களையும் எடுத்துவர முடியவில்லை .இதனால் நான் நடந்தே அளவு எடுத்தேன் .


ஒவ்வொரு அளவையும் எனது மனதில் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டேன். பின்னர் வீட்டிற்கு திரும்பியவுடன் கோவில் கட்டுமானத்திற்கு மூன்று வரைபடங்கள் தயாரித்தேன். அதனை அடிப்படையாகக் கொண்டு மரத்தால் கோவில் மாதிரியை உருவாக்கினேன். இந்த கோவில்கள் 1992 ஆம் ஆண்டு நடந்த கும்பமேளா விழாவின் போது சாமியார்கள் பார்வைக்கு வைத்தேன். அதில் அவர்கள் தேர்வு செய்த ஒன்றுதான் அயோத்தி ராமர் கோவிலாக தற்போது உருவாகி வருகிறது.


அயோத்தி ராமர் கோவில் சனாதன முறைப்படி நாகரா கட்டிடக்கலையில் கட்டப்பட்டு வருகிறது. கோவில் கட்டுமானத்தில் இரும்பு,உருக்கு போன்ற எந்த உலோகங்களையும் பயன்படுத்தவில்லை .பழங்கால முறைப்படி வெறும் கற்கள் மூலமே நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டு வருகிறது . இந்த கோவில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து நிலைத்து இருக்கும். நிலநடுக்கம் , வெள்ளம் ,மழை போன்ற எந்த ஒரு பேரிடரையும் தாங்கி நிற்கும் அளவுக்கு கோவில் மிகவும் வலுவாக கட்டப்பட்டு வருகிறது.


பழங்கால கோவில்களில் உள்ளது போன்று அயோத்தி கோவில்களிலும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. சனாதனம் என்பது நமது வாழ்வியல் முறை அதனை இந்து மதத்திற்குள் மட்டும் அடைத்து விட முடியாது. ஒவ்வொரு மனிதனும் அதனை கடைபிடிக்க வேண்டும். அது மதத்திற்கானது அல்ல. மனிதனுக்கானது என்ற பார்வையில் அதனை அணுக வேண்டும்.


அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் வெறும் ராமர் கோவில் மட்டும் இல்லாமல் இதர தெய்வங்கள் கோயிலும் கட்டப்பட்டுள்ளன .அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதே மாபெரும் சிறப்பானது. சுமார் 2.7 ஏக்கர் பரப்பளவில் 58 ஆயிரம் சதுர அடியில் மூன்று தளங்களுடன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அதன் கருவறை எண்கோண வடிவத்தில் கட்டப்படுகிறது. அதுதான் கோவிலின் உச்சபட்ச சிறப்பு அம்சம் .

இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News