டெல்லி மகளிருக்கு ரூ.2,500 உதவித்தொகை:முதல்வராக பதவி ஏற்ற அன்றே முதல் வாக்குறுதியை நிறைவேற்றிய பாஜக!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி டெல்லி முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டார். துணைநிலை ஆளுநரும் இந்த முடிவை ஏற்றுக் கொண்டதை அடுத்து டெல்லி ராம் லீலா மைதானத்தில் பிப்ரவரி 20 பதவியேற்பு விழா நடைபெற்றது
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முதல் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் துணை முதல்வர் பவன் கல்யாணும் கலந்து கொண்டனர் மேலும் விவசாயிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் மகளிர் சுய உதவி குழுக்களின் பிரதிநிதிகள் என கிட்டத்தட்ட 50,000 பேர் விழாவில் பங்கேற்றுள்ளனர்
பிரதமரின் முன்னிலையில் டெல்லியில் ஒன்பதாவது முதல்வராக ரேகா குப்தா பதவி ஏற்கப்பட்டார் பதவி ஏற்கப்பட்டு டெல்லி முதல்வராக ரேகா குப்தா அறிவித்த முதல் அறிவிப்பே பாஜக அளித்த வாக்குறுதியாக இருந்தது அதாவது பாஜக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் உதவித்தொகை வழங்கு ஏற்பாடு செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார் டெல்லி முதல்வர்
அதுமட்டுமின்றி அடுத்த மாதம் எட்டாம் தேதி பெண்களின் வங்கி கணக்குகளில் ரூபாய் 2500 டெபாசிட் செய்யப்படும் எனவும் தான் பதவி பிரமாணம் எடுத்த மேடையிலேயே தெரிவித்துள்ளார்.