நாடு முழுவதும் 26,367 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் நிறுவிய மத்திய அரசு: தமிழகத்தில் மட்டும் 1,495 இ.வி நிலையங்கள்!

நாடு முழுவதும் 26,367 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது நாடு முழுவதும் 26,367 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்
மாநிலங்களில் கர்நாடகா 5,879 சார்ஜிங் நிலையங்களுடன் முன்னணியில் உள்ளது அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா 3,842 உத்தரப் பிரதேசம் 2,113 டெல்லி 1,951 தமிழ்நாடு 1,495 கேரளா 1,288 ராஜஸ்தான் 1,285 குஜராத் 1,008 தெலுங்கானா 976 மத்தியப் பிரதேசம் 942 ஹரியானா 808 மற்றும் மேற்கு வங்கம் 791 உள்ளன
பிற மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம் 614 பஞ்சாப் 607 ஒடிசா 550 சத்தீஸ்கர் 290 ஜார்க்கண்ட் 277 பீகார் 393 இமாச்சலப் பிரதேசம் 114 உத்தரகண்ட் 202 மற்றும் கோவா 155 ஆகியவை அடங்கும் மேலும் வடகிழக்கில் அசாமில் 311 சார்ஜிங் நிலையங்களும் திரிபுராவில் 54 மணிப்பூரில் 50 அருணாச்சலப் பிரதேசத்தில் 44 மேகாலயாவில் 43 நாகாலாந்தில் 36 மிசோரமில் 13 சிக்கிமில் 11 சார்ஜிங் நிலையங்களும் உள்ளன
FAME-II திட்டத்தின் கீழ் இந்தியன் ஆயில் பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு 7,432 பொது சார்ஜிங் நிலையங்களை தங்கள் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையங்களில் அமைப்பதற்காக மார்ச் 2023 இல் ரூபாய் 800 கோடி அனுமதிக்கப்பட்டதாகவும்
1 ஜனவரி 2025 நிலவரப்படி இவற்றில் 4,523 நிறுவப்பட்டுள்ளன இருப்பினும் தற்போது 251 மட்டுமே முழுமையாக செயல்பாட்டில் உள்ளன என்றும் கூடுதலாக மார்ச் 2024 இல் 980 பொது சார்ஜிங் நிலையங்களை நிறுவ ரூபாய் 73.5 கோடி அனுமதிக்கப்பட்டது அதே நேரத்தில் பல்வேறு மாநிலங்களில் மேலும் 400 நிலையங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்