Kathir News
Begin typing your search above and press return to search.

கடந்த ஆண்டை விட ரூ.295 கோடி தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அதிகமாக ஒதுக்கீடு செய்த மத்திய அரசு!

ரயில்வே திட்டங்களுக்காக பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூபாய் 6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

கடந்த ஆண்டை விட ரூ.295 கோடி தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அதிகமாக ஒதுக்கீடு செய்த மத்திய அரசு!
X

KarthigaBy : Karthiga

  |  4 Feb 2025 10:15 PM IST

மத்திய அரசின் பட்ஜெட் கடந்த ஒன்னாம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரயில்வே பட்ஜெட் பற்றிய விவரங்களை ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ரயில்வே மேம்பாட்டு பணிகளுக்காக 2025 -26 ஆம் ஆண்டில் மொத்தம் ரூபாய் 2,52,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறினார். பின்னர் நேற்று மாநிலங்கள் வாரி ஒதுக்கீட்டை தனித்தனியாக அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

கர்நாடக மாநிலத்திற்கு ரூபாய் 7564 கோடியும் கேரளாவுக்கு ரூபாய் 3,042 கோடியும் கோவாவுக்கு ரூபாய் 482 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு ரொம்ப 6,626 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த ஐக்கிய முற்போக்கு அரசில் ஒதுக்கப்பட்டதை விட ஏழரை மடங்கு அதிகம். அப்போதிலிருந்து தற்போது வரை 1300 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரயில்வே கட்டுமானங்கள் முடிக்கப்பட்டு உள்ளன. சென்னை எழும்பூர் உட்பட 77 ரயில் நிலையங்கள் அம்ரித் நிலையங்களாக மேம்படுத்தப்படுகின்றன. இந்தியா முழுவதும் ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு மேம்படுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

50 நவபாரத் ரயில் இயக்கப்பட உள்ளன. 100 புதிய அம்ரித் ரயில் நிலையங்கள் அறிவிக்கப்பட உள்ளன. 200 புதிய வந்தே பாரத் ரயில்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது .ஆயிரம் மேம்பாலங்கள் மற்றும் சுரங்க பாதைகள் கட்டப்பட உள்ளன .பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்ற பிறகு ரூபாய் 40,000 கோடிக்கு புதிய ரயில்வே திட்டங்கள் வந்துள்ளன. ரயில்வே பாதுகாப்புக்கு மட்டும் ரூபாய் ஒரு லட்சத்து 16,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. பயணிகளின் வசதிக்காக 14,000 ஏ.சி.அல்லாத பெட்டிகள் தயாரிக்கப்படும்.

பாம்பனில் புதிய ரயில் பாலத்திட்டம் நிறைவு பெற்றுவிட்டது. நாட்டில் ஆறு குளங்களின் குறுக்கே எத்தனையோ பாலங்கள் உள்ளன. ஆனால் கடலில் உள்ள ஒரே பாலம் இதுதான்.நமது எந்திர தொழில்நுட்பம் உயர்ந்து இருக்கிறது. இந்த பாலத்தின் திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது. பிரதமர் பங்கேற்பார். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் .இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு கடந்த ஆண்டு ரூபாய் 6,331 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட ரூபாய் 295 கோடி அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News