Kathir News
Begin typing your search above and press return to search.

கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான 3 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்பு!

கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான 3 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்பு!
X

ParthasarathyBy : Parthasarathy

  |  19 Jun 2021 1:54 PM GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நகரில் மிகவும் பிரசித்திபெற்ற கந்தசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான பல்வேறு இடங்கள் மற்றும் கட்டடங்கள் சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த நிலையில் திருப்போரூர் அரசு மருத்துவமனை எதிரே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்க பட்டிருந்த கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான 3 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் கோயில் நிர்வாகத்தின் நடவடிக்கையால் மீட்கப்பட்டது.


சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்களை வருவாய்த் துறையுடன் இணைந்து, கோயில் நிர்வாகத்தினர் கடந்த சில நாட்களாக அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நில அளவீட்டு பணியின்போது, திருப்போரூர் அரசு மருத்துவமனை எதிரே கோயிலுக்கு சொந்தமான 45 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை, வருவாய்த் துறையினர் உறுதி செய்தனர்.

இதனை அடுத்து அறநிலையத் துறையின் காஞ்சிபுரம் மாவட்ட இணை ஆணையர் ஜெயராமன் உத்தரவின்பேரில், செயல் அலுவலர் சக்திவேல் தலைமையிலான கோயில் பணியாளர்கள் நிலத்திலிருந்த அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர். மேலும், அப்பகுதியில் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகை வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News