Kathir News
Begin typing your search above and press return to search.

இன்னும் 3 வாரங்களில் கூட்டணி இறுதி! திமுக கூட்டணி கட்சிகளும் அடக்கம்! அண்ணாமலை பேட்டி!

இன்னும் 3 வாரங்களில் கூட்டணி இறுதி! திமுக கூட்டணி கட்சிகளும் அடக்கம்! அண்ணாமலை பேட்டி!
X

SushmithaBy : Sushmitha

  |  7 Feb 2024 11:03 AM GMT

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு குறைந்த மாதமே உள்ள நிலையில், டெல்லியில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தலைமையில் அதிமுகவை சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். அதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, கடைசி நேரத்தில் கூட தமிழகத்தில் கூட்டணி மாறலாம்! கூட்டணிக்குள் யாரையும் வலுக்கட்டாயமாக இழுக்கும் வேலையை பாஜக செய்யவில்லை! யாரெல்லாம் பிரதமர் மோடியை ஏற்கிறார்களோ அவர்கள் கூட்டணியில் சேரலாம் என்று கூறியுள்ளார்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜகவின் கூட்டணி கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியிட்ட அறிவிப்பை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் கூட்டணிக்கு வரலாம் என்று அதிமுகவை குறிப்பிட்டு மத்தியில் துறை அமைச்சர் பேசவில்லை. யார் வேண்டுமானாலும் வரலாம் எல்லோரும் வரலாம் என்றே கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி திமுகவின் கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட பாஜக கூட்டணியில் சேரலாம் எனவும் அமித்ஷாவின் பேச்சு பொருள்படுகிறது என்று பேசிய அண்ணாமலை இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தமிழகத்தில் பாஜக தனது கூட்டணியை இறுதி செய்யும் என்று கூறினார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News