Kathir News
Begin typing your search above and press return to search.

காசி தமிழ்ச்சங்கமத்தின் 3ஆம் ஆண்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற அகத்திய முனிவர் நடைப்பயணம்!

காசி தமிழ்ச்சங்கமத்தின் 3ஆம் ஆண்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற அகத்திய முனிவர் நடைப்பயணம்!
X

SushmithaBy : Sushmitha

  |  9 Feb 2025 9:50 PM IST

காசி தமிழ்ச் சங்கமத்தின் 3-வது ஆண்டை முன்னிட்டு அகத்திய முனிவர் போல உடை அணிந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சென்னையில் நடைபெற்ற நடைப்பயணத்தில் பங்கேற்றனர்

இன்று 2025 பிப்ரவரி 09 மத்திய செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனமும் சாஸ்திர நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த நடைப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தன சாந்திபனி வித்யாலயா பிஎஸ் சீனியர் பிஎஸ்பிபி பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 4 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இதில் பங்கேற்றனர்


இந்திப் பிரச்சார சபாவில் தொடங்கி தி.நகரில் உள்ள அகத்திய முனிவர் ஆசிரம கோவிலில் முடிவடைந்த இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றனர் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அகத்தியர் குறித்த அமர் சித்ரா கதா வெளியீட்டு நூல் பிரதி வழங்கப்பட்டது மேலும் தரிசனத்திற்குப் பிறகு பிரசாதங்களும் வழங்கப்பட்டன

காசி தமிழ்ச் சங்கமத்தின் 3-ம் ஆண்டின் கருப்பொருள் அகத்திய முனிவர் தொடர்பானதாகும் அகத்தியர் ஒரு தேசிய ஒருங்கிணைப்பாளர் என்ற பொருளில் இந்த மாணவர்கள் ஆசிரியர்கள் அமைப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்ற இந்த நடைப்பயணம் மிகச் சிறப்பாக அமைந்தது


மேலும் சாஸ்திரா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ் வைத்ய சுப்ரமணியன் சாஸ்திராவின் சென்னை இயக்குநர் டாக்டர் சுதா சேஷையன் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் பெற்றோர் உள்ளிட்டோரும் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றனர்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News