Kathir News
Begin typing your search above and press return to search.

உலகின் 3-வது பொருளாதரமாக இந்தியாவை மாற்றும் நடவடிக்கை: சுழன்று வேலை செய்யும் மோடி அரசு!

உலகின் 3-வது பொருளாதரமாக இந்தியாவை மாற்றும் நடவடிக்கை: சுழன்று வேலை செய்யும் மோடி அரசு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 April 2025 8:58 PM IST

நாட்டில் தற்சார்பு உணர்வை மேம்படுத்தும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் துறை, பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் கடந்த 11 ஆண்டுகளில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதோடு, கோடிக்கணக்கான கிராமவாசிகளின் வாழ்க்கையில் நம்பிக்கைக்கான புதிய வெளிச்சத்தையும் கொண்டு வந்துள்ளது. புதுதில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் 2024-25 நிதியாண்டுக்கான காதி மற்றும் கிராமத் தொழில்களின் தற்காலிகத் தரவை வெளியிட்ட அதன் தலைவர் மனோஜ் குமார், 2024-25 ம் நிதியாண்டில் உற்பத்தி, விற்பனை மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் புதிய சாதனைகளைப் படைத்துள்ளது என்று தெரிவித்தார்.


கடந்த 11 ஆண்டுகளில், விற்பனையில் 447 சதவீதமும், உற்பத்தியில் 347 சதவீதமும், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் 49.23 சதவீதமும் அதிகரித்துள்ளது. 2013-14 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023-24 ம் நிதியாண்டில் விற்பனையில் 399.69% மற்றும் உற்பத்தியில் 314.79% அதிகரித்துள்ளது. இந்தச் சிறப்பான செயல்பாடு, 2047-ம் ஆண்டுக்குள் 'வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற தீர்மானத்தை நனவாக்குவதற்கும், இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதாரமாக மாற்றுவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது என்று மனோஜ் குமார் மேலும் கூறினார்.

2013-14 ம் நிதியாண்டில் காதி மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகளின் உற்பத்தி ரூ.26109.07 கோடியாக இருந்தது 2024-25 ம் நிதியாண்டில் சுமார் நான்கு மடங்கு அதிகரித்து ரூ.116599.75 கோடியாக 347 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். 2013-14 ம் நிதியாண்டில் விற்பனை ரூ.31154.19 கோடியாக இருந்தது முன்னெப்போதும் இல்லாத வகையில் 447 சதவீத வளர்ச்சியுடன் சுமார் ஐந்து மடங்கு அதிகரித்து 2024-25- ம் நிதியாண்டில் ரூ.170551.37 கோடியை எட்டியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் கதர் ஆடை உற்பத்தியில் வரலாறு காணாத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று அவர் கருத்து தெரிவித்தார். 2013-14 ம் நிதியாண்டில் கதர் ஆடை உற்பத்தி ரூ.811.08 கோடியாக இருந்த நிலையில், இது 366 சதவீதம் அதிகரித்து 2024-25 நிதியாண்டில் நான்கரை மடங்கு அதிகரித்து ரூ.3783.36 கோடியாக உள்ளது என்று அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News