Kathir News
Begin typing your search above and press return to search.

சிறப்பு இயக்கம் 3.0.. மத்திய அமைச்சகத்தினால் கிடைத்த வருவாய் இவ்வளவா..

சிறப்பு இயக்கம் 3.0.. மத்திய அமைச்சகத்தினால் கிடைத்த வருவாய் இவ்வளவா..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 Oct 2023 3:16 AM GMT

சிறப்பு இயக்கம் 3.0 இன் போது ரயில்வே அமைச்சகத்தால் எட்டப்பட்ட பல மைல்கற்கள். மண்டலத் தலைமையகங்கள், கோட்ட அலுவலகங்கள், உற்பத்தி அலகுகள், ஆர்.டி.எஸ்.ஓ, பயிற்சி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் 7000 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை உள்ளடக்கிய நாடு முழுவதும் பரவியுள்ள முழு இந்திய ரயில்வேயிலும், ரயில்வே அமைச்சகம் முழு ஆர்வத்துடனும் வீரியத்துடனும் 3.0 சிறப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. 31.10.2023 வரை 10,722 தூய்மை இயக்கங்களை நடத்த ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த பிரச்சாரத்தின் போது, அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களில் குப்பைகளை அகற்றுவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. 3,18,504 சதுர அடி இடத்தை விடுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.


இந்த இலக்குகளை அடைவதற்காக, 2023 அக்டோபர் 13 வரை 5,297 தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1.02 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த பிரச்சாரத்தின் போது, அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களில் குப்பைகளை அகற்றுவதில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது இதன் விளைவாக 3,97,619 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டது.


மேலும், அலுவலக குப்பைகளை அகற்றியதன் மூலம் சுமார் ரூ.66.83 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பதிவு மற்றும் களையெடுக்கும் நோக்கத்திற்காக 51,954க்கும் மேற்பட்ட கோப்புகள் ஆய்வு செய்யப் பட்டுள்ளன. இப்படி சிறப்பான மத்திய அரசின் நிகழ்ச்சிகள் மூலமாக குறிப்பாக சிறப்பு இயக்கம் தூய்மை பணிக்காக பல லட்சம் ரூபாய் வருவாய் ரயில்வே துறைக்கு கிடைத்து இருப்பதாகவும் இந்திய ரயில்வே அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News