நரேந்திர மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட்.. எதிர்பார்ப்புகளுடன் காத்து இருக்கும் பல்வேறு துறைகள்..
By : Bharathi Latha
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த நரேந்திர மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும். எனவே இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறையினர்களுக்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. பல்வேறு துறைகளுக்கான எதிர்பார்ப்புகள் மற்றும் அவை பூர்த்தி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிதி அமைச்சகம் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மின்சார வாகன (EV) பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா ரூ.115 பில்லியன் மதிப்பிலான மானியங்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ், ஓலா எலக்ட்ரிக், ஒலெக்ட்ரா கிரீன்டெக் மற்றும் ஜே.பி.எம் ஆட்டோ போன்ற நிறுவனங்கள் பயனடையும். மலிவு விலை வீடுகளுக்கான நிதியை இந்த பட்ஜெட் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மெட்ரோடெக் டெவலப்பர்ஸ் மற்றும் பிற கட்டுமான நிறுவனங்கள் பயனடையும் என்று சிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், நகர்ப்புற வீடுகளுக்கான வட்டி மானிய திட்டம் ஆவாஸ் ஃபினான்சியர்ஸ் மற்றும் ஹோம் ஃபர்ஸ்ட் ஃபினான்ஸ் போன்ற நிதி நிறுவனங்களையும் மேம்படுத்தும் என்று ஜெஃப்ரீஸ் நிறுவனம் கருதுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு பட்ஜெட்டில் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாக இருக்கிறது. அதன் பிறகு எந்தெந்த துறையில் எவ்வளவு முதலீடுகளை அரசு கொண்டு வருகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
Input & Image courtesy: Livemint News