காசி தமிழ் சங்கம் 3.0 நிகழ்ச்சி: கலாச்சார தொடர்பை மீட்டெடுக்கும் மோடி அரசு!

By : Bharathi Latha
மூன்றாவது காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சி வரும், பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 21 வரை நடக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உபியின் வாரணாசியுடன் தமிழர்களுக்கு உள்ள கலாச்சார தொடர்பை எடுத்துரைக்கும் முயற்சியில், அவற்றை வலுப்படுத்த காசி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி 2022 துவங்கப்பட்டது. நவம்பர் 16 முதல் டிசம்பர் 16 வரை நடந்த இந்த நிகழ்ச்சி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இதன் இரண்டாவது பாசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி 2021 டிசம்பர் 17 முதல் டிசம்பர் 30 வரை நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு தமிழக மற்றும் உ.பி மக்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் மூன்றாவது தாசி தமிழ் சங்கமும் நிகழ்ச்சி பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 25 வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இந்த ஆண்டு நடக்கும் இந்நிகழ்ச்சியின் மையக் கருத்து அகத்தியரின் தத்துவம் என குறிப்பிட்டுள்ள, அவர் இதற்கான முன்பதிவு நடைபெற உள்ளதாக கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள அகத்தியர் கோவில் மற்றும் சித்த மருத்துவம் குறித்த ஆவணப்படம் வெளியிடப்படும் என தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் 1200 பேர் பங்கு பெறுவர்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பார்வையாளர்களின் எண்ணிக்கை வருடம் தோறும் உயர்வதே மத்திய அரசு பெருமைக்குரியது என குறிப்பிட்டுள்ளது.
