காசி தமிழ் சங்கம் 3.0:தொடங்கியது 10 நாள் கலாச்சார பரிமாற்ற திட்டம்! 1,200 பிரதிநிதிகள் பங்கேற்பு!

By : Sushmitha
காசி தமிழ் சங்கமத்தின் 3.0 மூன்றாவது பதிப்பு இன்று 2025 பிப்ரவரி 15 வாரணாசியில் தொடங்கப்பட்டது 10 நாள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து சுமார் 1,200 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் இதை இன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி வாரணாசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையிலான நாகரிக மற்றும் கலாச்சார பிணைப்பைக் கொண்டாடுகிறது பிப்ரவரி 15 முதல் 24 வரை நடைபெறும் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சியின் கருப்பொருள் மகரிஷி அகஸ்தியரை மையமாகக் கொண்டிருக்கும்
நாட்டின் மிக முக்கியமான மற்றும் பழமையான கற்றல் தளங்களில் இரண்டு தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான பழங்கால தொடர்புகளை மீண்டும் கண்டுபிடித்து மீண்டும் உறுதிப்படுத்தி கொண்டாடுவதே காசி தமிழ் சங்கமத்தின் நோக்கமாகும் என்று கல்வி அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது
மேலும் இந்த நிகழ்வின் போது பிரதிநிதிகள் அயோத்தியில் உள்ள மகா கும்பமேளா மற்றும் ராமர் கோயிலுக்கும் செல்ல உள்ளனர் இதனால் இந்த நிகழ்வு ஒரு தெய்வீக அனுபவத்தை வழங்கும் மேலும் நமது நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் இரண்டு காலத்தால் அழியாத மையங்களான தமிழ்நாட்டையும் காசியையும் இன்னும் நெருக்கமாகக் கொண்டுவரும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது
மேலும் அகஸ்தியரின் பல்வேறு அம்சங்கள் மற்றும் சுகாதாரம் தத்துவம் அறிவியல் மொழியியல் இலக்கியம் அரசியல் கலாச்சாரம் கலை குறிப்பாக தமிழ் மற்றும் தமிழ்நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்புகள் பற்றிய கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் பட்டறைகள் புத்தக வெளியீடு போன்றவை காசி தமிழ் சங்கம் 3.0 இன் போது காசியில் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
