ஜூன் 30 முதல் ஜூலை 5 வரை ஸ்பெயின்,போர்ச்சுகல்,பிரேசில் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் நிர்மலா சீதாராமன்!

By : Sushmitha
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்,2025 ஜூன் 30 முதல் ஜூலை 5 வரை ஸ்பெயின்,போர்ச்சுகல்,பிரேசில் நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்கிறார் அவரது தலைமையில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையைச் சேர்ந்த இந்தியக் குழுவும் பயணம் மேற்கொள்கிறது
தனது பயணத்தின் ஒரு பகுதியாக ஸ்பெயினில் உள்ள செவில்லி நகரில் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4-வது சர்வதேச மேம்பாட்டு நிதி மாநாட்டில் கலந்து கொள்ளும் மத்திய நிதியமைச்சர் இந்தியா சார்பில் அறிக்கையை சமர்ப்பிக்கிறார் நிலையான வளர்ச்சிக்கான தனியார் மூலதனத்தின் திறனை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார் இந்த மாநாட்டின் இடையே ஜெர்மனி,பெரு மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர்களையும்,ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் தலைவரையும் மத்திய நிதியமைச்சர் சந்திக்கிறார்
அதனை தொடர்ந்து போர்ச்சுகலின் லிஸ்பன் நகருக்கு செல்லும் மத்திய நிதியமைச்சர் போர்ச்சுகல் நிதியமைச்சருடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் முக்கிய முதலீட்டாளர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடுகிறார்
மேலும் பிரேசில்,சீனா,இந்தோனேசியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த நிதியமைச்சர்களுடனும் இருதரப்பு சந்திப்புகளை மத்திய நிதியமைச்சர் நடத்த உள்ளார்
