Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி 3.0 அரசு.. GST கவுன்சில் முதல் கூட்டம்.. முக்கிய முடிவுகளால் வணிகர்கள் வரவேற்பு..

மோடி 3.0 அரசு.. GST கவுன்சில் முதல் கூட்டம்.. முக்கிய முடிவுகளால் வணிகர்கள் வரவேற்பு..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 Jun 2024 8:33 AM IST

GST கவுன்சிலின் 53-வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்று இருக்கிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பொறுப்பேற்ற பின், நடைபெற்ற முதல் GST கவுன்சில் கூட்டம் இதுவாகும். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து, அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவான விளக்கங்களை அளித்து இருக்கிறார். அது குறித்து தற்போது பார்ப்போம். ரயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கெட், பயணியர் காத்திருப்பு அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை ஆகிவற்றுக்கு ஜி.எஸ்.டியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


உருக்கு மற்றும் அலுமினிய பால் கேன்களுக்கும், சோலார் குக்கர்களுக்கும் 12% GST வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான கல்வி நிறுவனங்களில் உள்ள விடுதிகளைத் தவிர, வெளியில் உள்ள பிற தங்கும் விடுதிகளில், ஒரு நபர் 90 நாட்கள் தங்குவதற்கு 20,000 ரூபாய்க்குள் கட்டணம் வசூலிக்கப்படும் பட்சத்தில் அதற்கு ஜி.எஸ்.டியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. போலியான விலைப்பட்டியல்களை சமர்ப்பித்து, உள்ளீட்டு வரி பயன் கோருவதை தடுக்கும் நோக்கில், விரைவில் நாடு முழுதும், பயோமெட்ரிக் அடிப்படையிலான ஆதார் பதிவு பயன்படுத்தப்பட உள்ளது.

GST தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கான வரம்பாக, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு 20 லட்சம் ரூபாயும், உயர் நீதிமன்றத்திற்கு 1 கோடி ரூபாயும், உச்ச நீதிமன்றத்திற்கு 2 கோடி ரூபாயுமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலை GST-யில் சேர்க்க வேண்டும் என்பது அரசின் நோக்கமாகும். மாநில அரசுகளுடன் பேசி விரைவில் இதற்கான முடிவு எட்டப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள கூறி இருக்கிறார்.

Input & Image courtesy:News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News