உயர்த்தப்பட்டது எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட மதிப்பு! மொத்தம் 33 மாதங்கள் தான்!

By : Sushmitha
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணியை துவங்கி உள்ள எய்ம்ஸ் நிர்வாகம் அதன் திட்ட மதிப்பை அதிகரித்துள்ளது.
அதாவது, 221 ஏக்கரில் மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமானத்தின் திட்ட மதிப்பானது முதலில் 1978 கோடி ரூபாய் இருந்தது ஆனால் தற்பொழுது 2021 கோடி ரூபாயாக எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானத்தின் திட்ட மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக மருத்துவக் கல்லூரி, அவசர சிகிச்சை பிரிவு உள் மற்றும் வெளி நோயாளிகளுக்கான வார்டு மாணவர்களுக்கான விடுதி கட்டிடங்கள் என 18 மாதங்களுக்குள் இவை அனைத்தையும் கட்டி முடிக்க எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை மேற்கொண்டுள்ள எல் அண்ட் டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி எய்ம்ஸ் மருத்துவமனையின் மொத்த கட்டுமான பணியும் 33 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Source : Dinamalar
