Kathir News
Begin typing your search above and press return to search.

ஒலிம்பிக் போட்டி 33 பதக்கங்களை வென்ற இந்தியா: பிரதமர் பாராட்டு!

ஒலிம்பிக் போட்டி 33 பதக்கங்களை வென்ற இந்தியா: பிரதமர் பாராட்டு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 March 2025 6:04 AM

இத்தாலியில் உள்ள டுரின் நகரில் நடைபெற்ற உலக குளிர்கால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2025-ல் இந்திய தடகள வீரர்களின் சிறப்பான செயல்திறனை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இந்திய அணி 33 பதக்கங்களைத் தாயகத்திற்கு கொண்டு வந்து, உலக அரங்கில் நாட்டிற்குப்ஸபெருமை சேர்த்துள்ளது.


நாடாளுமன்றத்தில் விளையாட்டு வீரர்களைச் சந்தித்த திரு மோடி, அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற உலகக் குளிர்கால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நாட்டிற்கு பெருமை சேர்த்த நமது விளையாட்டு வீரர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நமது சிறப்புமிக்க அணி 33 பக்கங்களைத் தாயகத்திற்கு கொண்டு வந்துள்ளது" பெருமை தருவதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்ட பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News