"கடற்கொள்ளையில் கெத்து காட்டிய சோமாலியர்கள் 35 பேரை கைது செய்த இந்திய கடற்படை"
By : Sushmitha
கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கு நாடான ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு சவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் குழுவிற்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை செங்கடல் பகுதியில் தாக்கி வந்தனர். அதோடு அந்த வழியாக செல்லும் கப்பல்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்துவதில் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் கடல் சார் வணிகத்தை மேற்கொண்ட நாடுகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்ததோடு கவலையிலும் மூழ்கியது!
இந்த நிலையில் கடந்த டிசம்பரில் மால்டா நாட்டு சரக்கு கப்பல் ஒன்று அந்த வழியாக சென்றபோது கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பலை கடத்தி, அதிலிருந்த மாலுமிகளை மட்டும் விட்டுவிட்டு அந்தக் கப்பலை தங்களது கடத்தலுக்கு பயன்படுத்தி வந்தனர். மேலும் அந்த சரக்கு கப்பலை பணம் பறித்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் கடற்கொள்ளையர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சோமாலியாவின் செங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த கொள்ளையர்களின் கப்பலை இந்திய கடற்படை போர் கப்பல் நிறுத்தி வானில் பறந்த கடற்கரை ஹெலிகாப்டர் மூலம் கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு அரபிக் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய கடற்படை சோமாலிய கடற்கொள்ளையர்கள் 35 பேரை கைது செய்தது.
மேலும் கடற்கொள்ளையர்களிடம் பினை கைதிகளாக சிக்கியிருந்த 17 கப்பல் ஊழியர்களையும் பாதுகாப்பாக மீட்டுள்ளது இந்திய கடற்படை!
Source : Dinamalar