Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் எம்.பி. தொடர்புடைய இடங்களில் நடந்த ரெய்டில் சிக்கிய ரூ.351 கோடி! 80 ஊழியர்களுடன் 5 நாட்களாக எண்ணப்பட்ட பணம்!

காங்கிரஸ் எம்.பி. தொடர்புடைய இடங்களில் நடந்த ரெய்டில் சிக்கிய ரூ.351 கோடி! 80 ஊழியர்களுடன் 5 நாட்களாக எண்ணப்பட்ட பணம்!

SushmithaBy : Sushmitha

  |  12 Dec 2023 12:49 AM GMT

கடந்த ஆறாம் தேதி முதல் வருமானவரித்துறையால் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மக்களவை எம்பி தீரஜ் பிரசாந்த் சாகுவின் குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பத்து பீரோக்களில் 500 ரூபாய் தாள்கள் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பீரோவில் அடுக்கி வைக்கப்பட்ட பணத்தை கைப்பற்றிய வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த ஐந்து நாட்களாக மூன்று வங்கி ஊழியர்கள் என மொத்தம் 80 பேர் பங்கேற்று தானியங்கி பணம் எண்ணும் இயந்திரத்தின் மூலமும் பணத்தை எண்ணி துவங்கியுள்ளனர்.

இப்படி விடிய விடிய மூன்று ஷிஃப்ட்களாக எண்ணப்பட்ட இந்த பணத்தின் மதிப்பானது 351 கோடி ரூபாய் என்று வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இவ்வளவு பெரிய தொகையானது குறிப்பிட்ட ஒரே நபர் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம் அதிகாரிகள் கைப்பற்றி இருப்பது இதுவே முதல் முறை என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காங்கிரஸ் எம்பியிடம் இருந்து பெரிய தொகை கைப்பற்றப்பட்டுள்ளது! ஆனால் இது குறித்து எதிர்க்கட்சிகள் ஏன் எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகிறது? என்று கேள்வி எழுப்பியதற்கு, இந்த விவகாரத்தில் கட்சி சார்ந்து எதுவும் கூற முடியாது ஏனென்றால் இது அந்த எம்பியின் தனிப்பட்ட வணிகம் தொடர்பான பிரச்சனை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Source : Puthiyathalaimurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News