குடியரசு தலைவர் உரையில் இடம்பெற்ற அயோத்தி கோவில் மற்றும் 370 வது சட்டப்பிரிவு!
By : Sushmitha
இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில் தேர்தல் முடிந்த பிறகு முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
முன்னதாக குடியரசு தலைவர் உரையாற்றிய பொழுது, அயோத்தி ராமர் கோவில் கட்ட பல நூற்றாண்டுகளாக மக்கள் கனவு கொண்டிருந்தனர். அவர்களின் கனவு தற்போது நிறைவேறி உள்ளது. அயோத்தி ராமர் கோவிலில் கட்டுமானம் என்பது மக்களின் நீண்ட நாள் எதிர்பார்க்கும் கூட, கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு ஐந்து நாட்களில் 13 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
அதேபோன்று ஜம்மு காஷ்மீரில் 370 ஆவது பிரிவு ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்பினர் அதேபோல சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு அந்த நிகழ்வும் வரலாறாக மாறிவிட்டது, என்று பேசியுள்ளார். அயோத்தி ராமர் கோவில் குறித்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாடிவரும் நிலையில் குடியரசுத் தலைவர் தனது அரசு உரையில் ராமர் கோவில் சிறப்பு குறித்தும் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து பேசி இருப்பது அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
Source : The Hindu Tamil thisai