'நேற்று மட்டும் 378 பேர் இறப்பு என்ற நிலையில் TASMAC திறந்திருப்பது மோசமான செயல்' : விளாசும் H. ராஜா!

By : Kathir Webdesk
கொரோனா தொற்று 2-வது அலை தமிழகத்தில் அதிகரித்து வந்ததை அடுத்து தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதை தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது.
இந்நிலையில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக பாஜக திமுக அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளது. இது பாஜக தலைவர் கூறுகையில், "டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்றும் மேலும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி நாளை காலை 10 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் அவரவர் வீடுகளின் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்", என்று அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து, தி.மு.க அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "3 மே 2020 அன்று தொற்று பாதிப்பு 759 இறப்பு 103 என்று இருந்த போது TASMAC திறப்பிற்கு எதிராக இன்றைய முதல்வர் ஆர்பாட்டம் நடத்தினார்.ஆனால் நேற்று மட்டும் பாதிப்பு 15759 இறப்பு 378 இருக்கும்போது TASMAC திறந்திருப்பது எவ்வளவு மோசமான செயல். இதை பா.ஜ.க வன்மையாக கண்டிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
23 மே 2020 அன்று தொற்று பாதிப்பு 759 இறப்பு 103 என்று இருந்த போது #TASMAC திறப்பிற்கு எதிராக இன்றைய முதல்வர் ஆர்பாட்டம் நடத்தினார்.ஆனால் நேற்று மட்டும் பாதிப்பு 15759 இறப்பு 378 இருக்கும்போது #TASMAC திறந்திருப்பது எவ்வளவு மோசமான செயல்.இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. @mkstalin pic.twitter.com/aoAPjEypIE
— H Raja (@HRajaBJP) June 12, 2021
மேலும் பல அரசியல் தலைவர்களும் தி.மு.க-வுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.
