விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் பாஜக இளைஞரணி!! 4 லட்சம் பேர் இளைஞர் அணியில் சேர்க்க முடிவு!!

By : G Pradeep
கட்சியை வலுப்படுத்துவதற்காக திமுகவை போல பாஜகவின் இளைஞர் அணி தற்பொழுது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வரப்போகும் தேர்தலில் இளைஞர் அணி முன் களப்பணியாளராக செயல்பட வேண்டும் என்று செயல்பட்டு வரும் நிலையில் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் சூர்யா பெருங்கோட்டம் வழியாக சுற்று பயணங்களை மேற்கொண்டு தேர்தலுக்காக தயார்படுத்தி வருகின்றார்.
திருச்சி செங்கோட்டம் பகுதிக்கு உட்பட்ட 11 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் சூர்யா மேற்கொண்ட நிலையில் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் பெருங்கோட்ட கூட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், சென்னை மதுரை கோயம்புத்தூர் போன்ற பெரிய கோட்டங்களில் தாம் நிலை கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவை வலுப்படுத்தும் வகையில் அக்கட்சியின் இளைஞர் அணி தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், அதற்காக துணைத் தலைவர் உட்பட 33 பேருக்கு பதவி வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லா மாவட்டங்களிலும் இருக்கும் 20 ஒன்றியங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில், திருச்சியில் மட்டும் 19,800 புதிய நிர்வாகிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வரும் ஜனவரியில் பாஜகவின் இளைஞர் அணியில் 4 லட்சம் பேர் நிர்ணயம் செய்வதற்கு இலக்கு வைக்கப்பட்டு இருப்பதாகவும், வாக்குச்சாவடி முகவர் பொறுப்பிலும் அதிக அளவில் இளைஞர்கள் நியமிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி உட்பட எட்டு பெருங்கோட்டங்களில் கூட்டம் நிறைவடைந்த பிறகு கோவை அல்லது மதுரை மாவட்டத்தில் பிப்ரவரி ஒன்றாம் தேதி இளைஞரணி மாநாடு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா போன்றோர் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
