சந்திரயான் 4 திட்டம் மற்றும் 24,475 கோடி உர மானியம்- மத்திய அரசு ஒப்புதல்!
சந்திரயான்-4 திட்டத்திற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.
By : Karthiga
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது .குறிப்பாக முக்கியமான விண்வெளி திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த வகையில் சந்திரயான் -4 திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி அங்கிருந்து மாதிரிகளை சேகரித்து மீண்டும் இந்தியாவுக்கு எடுத்து வந்து ஆய்வு செய்யும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்படும். இந்த திட்டத்தை இஸ்ரோ சார்பில் 2004 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல வெள்ளி கோள் ஆய்வு பணிகளுக்கும் மந்திரி சபை தனது ஒப்புதலை வழங்கி உள்ளது.
இதைத்தவிர குறுவை சாகுபடி பருவத்துக்காக பொட்டாசியம் மற்றும் பாஸ்பேட் உரங்களுக்காக விவசாயிகளுக்கு ₹24,4753 கோடி மானியம் வழங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது. மேலும் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்யும் பிரதமர் ஆஷா திட்டத்திற்கும் மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியுள்ளது 35 ஆயிரம் கோடி மதிப்பில் ஆன இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதுடன் அத்தியாவசிய பொருள்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் வைத்து நுகர்வோருக்கும் பலன் வழங்கப்படும்.
பழங்குடி மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான பிரதமர் ஜன் ஜாடியா உன்னத் கிராம் அபியான் திட்டத்திற்கு இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது .இந்த திட்டத்தின் மொத்த செலவினம் ரூபாய் 79, 156 கோடியாகும். இதில் மத்திய அரசின் பங்கு ரூபாய் 56,333 கோடியும் மாநில அரசு பங்கு ரூபாய் 22,823 கோடியும் ஆகும். 2024-25ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் படி 549 மாவட்டங்கள் உட்பட்ட 63 ஆயிரம் கிராமங்களில் உள்ள ஐந்து கோடிக்கும் மேற்பட்ட பழங்குடியினர் பலன் பெறுவார்கள்.ஐ.ஐ.டி , ஐ .ஐ. எம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை போல அனிமேஷன், ஆன்லைன் விளையாட்டுகள் உள்ளிட்ட துறைகளுக்காக உயர் கல்வி நிறுவனத்துக்கான பரிந்துரையையும் மந்திரி சபை ஏற்றுக்கொண்டது .இந்த தகவல்களை மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பின்னர் தெரிவித்தார்.
SOURCE :News