Kathir News
Begin typing your search above and press return to search.

"ஒவ்வொரு இஸ்லாமியரும் குறைந்தது 4, 5 பேரையாவது கொல்ல வேண்டும்" என பேசியவர் காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு தலைவரானார்!

ஒவ்வொரு இஸ்லாமியரும் குறைந்தது 4, 5 பேரையாவது கொல்ல வேண்டும் என பேசியவர் காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு தலைவரானார்!
X

ShivaBy : Shiva

  |  19 Jun 2021 11:44 AM IST

2022-ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தங்களை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி தங்களின் பழைய தேர்தல் வியூகம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. சிறுபான்மையினரை திருப்திப்படுத்தி அவர்களின் வாக்கை பெறுவதே அது. சிறுபான்மையினரை கவருவதற்கான முயற்சிகளை தற்போது காங்கிரஸ் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தர பிரதேசத்தில் 2022 சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறும் முயற்சியில், உத்தர பிரதேசத்தின் உருது கவிஞராக இருந்து அரசியல்வாதியாக மாறிய முகமது இம்ரான் கான் என்ற இம்ரான் 'பிரதாப்கரி' என்பவரை தற்போது காங்கிரஸ் கட்சி பயன்படுத்த உள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவராக இம்ரான் பிரதாப்காரியை நியமித்தார். ஏற்கெனவே அந்த பதவியில் இருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நதீம் ஜாவேத் என்பவரை நீக்கி விட்டு இம்ரானை சிறுபான்மையினர் பிரிவு தலைவராக காங்கிரஸ் தலைவர் நியமித்துள்ளார்.

பிரதாப்கரி 2019-ல் காங்கிரசில் இணைந்தார். உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தில் இருந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சமாஜ்வாதி கட்சியின் எஸ்.டி.ஹசனிடம் தோல்வி அடைந்தார்.

பிரதாப்காரியின் சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியவுடன் அவர் பிரியங்கா காந்திக்கு நெருக்கமானவர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

தற்போது சிறுபான்மையினர் பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் பல்வேறு சர்ச்சைக்குரிய மதக் கலவரங்களை தூண்டும் பேச்சுக்களை பேசி உள்ளார். இவரது பேச்சுக்கள் அனைத்துமே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஜிகாதில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கும் விதமாகவே உள்ளது என்று சமூக வலைதளங்களில் அவரது வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

அவர் 2019-ஆம் ஆண்டு வெளியிட்ட வீடியோவில் முஸ்லிம்களை தங்கள் மக்களின் மரணத்திற்குப் பழிவாங்க குறைந்தபட்சம் 4 - 6 பேரைக் கொல்லும்படி அறிவுறுத்தும் விதமாக "கோழைத்தனமாக இறப்பது ஏற்கத்தக்கது அல்ல, அவர்களை பழி வாங்குவதற்காக நீங்கள் இறப்பதற்கு முன் குறைந்தது 4 முதல் 6 பேரைக் கொல்லுங்கள்."என்று அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இப்படி மத கலவரத்தை தூண்டும் விதமாக பேசுவதை காங்கிரஸ் கட்சி தலைவராக நியமித்துள்ளதாக பலர் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News