Kathir News
Begin typing your search above and press return to search.

தீவிரமாக நடைபெறும் தூய்மை சிறப்பு இயக்கம் 4.0.. அடுத்த கட்டத்திற்கு இந்தியாவை நகற்றும் மோடி அரசு..

தீவிரமாக நடைபெறும் தூய்மை சிறப்பு இயக்கம் 4.0.. அடுத்த கட்டத்திற்கு இந்தியாவை நகற்றும் மோடி அரசு..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 Oct 2024 10:22 PM IST

பாதுகாப்பு உற்பத்தித் துறையின் பொதுத்துறை நிறுவனங்களிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அதனுடன் இணைந்த அலுவலகங்களிலும் தூய்மை குறித்த சிறப்பு இயக்கம் 4.0 முழுமையான அணுகுமுறையுடன் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2024 செப்டம்பர் 15 முதல் 2024 செப்டம்பர் 30 வரை ஆயத்த கட்டத்துடன் இந்த இயக்கம் தொடங்கியது.

2024 அக்டோபர் 02 முதல் தொடங்கி 2024 அக்டோபர் 31 வரை செயல்பாட்டு கட்டம் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு உற்பத்தித் துறையுடன் இணைந்த சுமார் 800 இடங்கள் அடையாளம் காணப்பட்டு தூய்மை இயக்கம் செயல்படுத்தப்படுகிறது . இதுவரை 605 இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தினசரி இதன் முன்னேற்றம் உயர் அலுவலர்களால் கண்காணிக்கப் படுகிறது.

இதுவரை இலக்குகளை வெற்றிகரமாக அடைவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க வகையில் 8 லட்சம் சதுர அடி இடம் கழிவுகள், இதர தேவையற்ற பொருட்களை அகற்றிய பின்னர் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 109,903 சதுர அடி பரப்பளவு கழிவுகள், இதர கழிவுப் பொருட்களை அகற்றிய பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News