பொங்கலுக்கு பிறகு பல கட்சிகள் கூட்டணியில் இணையும்! காசி தமிழ் சங்கமம் 4.0 தொடக்க விழாவில் பேசிய நயினார் நாகேந்திரன்!

By : G Pradeep
காசி தமிழ் சங்கமம் 4.0 நெகிழ்ச்சியானது ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு மற்றும் காசி இரண்டிற்கும் இடையில் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதற்காக நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அகத்திய முனிவர் பயணம் தென்காசியிலிருந்து காசி நோக்கி தொடங்கப்பட்டது. இந்த பயணத்தை மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
மேலும்தென்காசி பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யா சாமி உட்பட பல அரசியல் பிரமோகர்கள் இணைந்து காசிக்கு புறப்பட்ட 15 வாகனங்களை அசைத்து தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் மொழியை பற்றி பெருமையாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதை பார்க்கும் பொழுது வாழும் பாண்டிய மன்னராக பிரதமர் மோடி இருந்து வருவதாகவும், அதனால் காசியில் தமிழ் சங்கம் மாநாட்டை நான்கு வருடம் நடத்தி வருகிறார் என்றும் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக திமுக இறந்தவர்களின் பட்டியல் வாக்காளர்கள் வரிசையில் இருப்பதை நீக்க விடாமல் செய்வதற்காக எஸ்ஐஆர் விவகாரத்தில் தொடர்ச்சியாக பிரச்சனை செய்து வருகிறது. பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களின் ஆதரவு இருப்பதால் பொங்களுக்குப் பிறகு மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.
மேலும் தற்பொழுது அதிமுகவிலிருந்து தவெகவிற்கு செங்கோட்டையன் சென்றுள்ள நிலையில் மீண்டும் வேறு கட்சிக்கு செல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார். எந்த தனிநபரை வைத்தும் எந்த கட்சியும் செயல்பட்டு வருவது கிடையாது. தேர்தலுக்கு முந்தைய நாள் கூட அரசியலில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. வரப்போகும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
