அரசு பணி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 400 மருத்துவர்கள்:நியாமில்லை என மருத்துவர்கள் குமுறல்!

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தமிழக அரசு நிரப்பி வருகிறது இதன்படி கடந்த ஜனவரி 5ஆம் தேதி 2,553 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடந்த தேர்வில் 24 ஆயிரம் எம்பிபிஎஸ் படித்து முடித்து மருத்துவர்கள் பங்கேற்றனர் இதில் 14,855 மருத்துவர்கள் தேர்ச்சி பெற்றனர்
இதனைத் தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற்றது இதில் 4,585 மருத்துவர்கள் பங்கேற்றனர் ஆனால் இதில் கிட்டத்தட்ட 400 மருந்துகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகும் சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதியற்றவர்கள் என நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அதாவது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி கடந்த 2024 ஜூலை 15ஆம் தேதிக்கு முன்பு தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவர்கள் மட்டுமே உதவி மருத்துவர் பணிக்கு தகுதி பெற்றவர்களாக கூறப்படுகிறது
ஆனால் ஏராளமான மருத்துவர்கள் ஜூலை 15ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளதாகவும் அவர்களில் 400 மருத்துவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வந்ததால் 400 மருத்துவர்கள் தகுதியில்லாதவர்கள் என நீக்கப்பட்டுள்ளனர்