தலா ஒரு குடும்பத்துக்கு ரூ.4.13 லட்சம் கடன்: தமிழக மக்கள் அதிர்ச்சி!

By : Bharathi Latha
தமிழக அரசு, மாநிலத்தில் தனி சமையல் அறையுடன் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரேஷன்கார்டு வழங்குகிறது. ரேஷன்கடைகளில் கார்டுதாரர்களுக்கு, மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.தமிழகத்தில் பெரும்பாலான குடும்பத்தினர் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். தற்போதைய நில வரப்படி, 2. 25 கோடி ரேஷன்கார்டுகள் உள்ளன.
நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், தமிழக அரசின் கடன் வரும் நிதியாண்டில், 9.30 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று தெரி விக்கப்பட்டு உள்ளது. இந்த கடனை, ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால், தலா ஒரு குடும்பத்துக்கு, 4.13 லட்சம் ரூபாய் கடன் இருக்கும்.
மொத்த ரேஷன் கார்டுகளில், 7.03 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். அதன் அடிப்படை யில் அரசின் கடனை, தனி நபருக்கு கணக்கிட்டால், ஒவ்வொரு நபருக்கும்,தலா 1.32லட்சம் ரூபாய் கடன் உள்ளது.
