நிறைவை எட்டிய மகா கும்பமேளா:45 நாட்களில் 65 கோடியே 21 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை!

உத்திரபிரதேசத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி தற்போது நிறைவை எட்டியுள்ளது மொத்தம் 45 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 66 கோடியே 21 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்
ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு பெறுவதை ஒட்டி இந்த மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளவர்களின் எண்ணிக்கையை உத்திரபிரதேச அரசு வெளியிட்டுள்ளது
மேலும் கும்பமேளா நிகழ்ச்சி தெய்வீகமாகவும் மகத்தானதாகவும் மாறி உலகம் முழுவதும் ஒற்றுமையை எடுத்துரைக்கிறது என்றும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் போலீசார் துப்புரவு பணியாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளாட்சி நிர்வாகம் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் உத்திர பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்