Kathir News
Begin typing your search above and press return to search.

திராவிட மாடல் ஆட்சியின் கவலைக்கிடம் : 4500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை!

திராவிட மாடல் ஆட்சியின் கவலைக்கிடம் : 4500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை!
X

SushmithaBy : Sushmitha

  |  12 July 2024 2:17 AM GMT

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 37 ஆயிரம் அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் 4,500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. மேலும் இதில் 2,994 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. இதனால் தலைமை ஆசிரியரின் பணிகள், சம்பந்தப்பட்ட பள்ளியின் பிற பட்டதாரி அல்லது முதுநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் பொறுப்பு காரணமாக அந்த ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாட வேலைகளில் அவர்களின் வகுப்புகளை நடத்த முடியாத நிலையும், அதனால் பணிச் சுமையும் ஏற்பட்டுள்ளது. இது பற்றி ஆசிரியர்கள் தரப்பில், அரசு தலைமை ஆசிரியர் பதவி உயர்வுகளை விரைந்து வழங்கினால் காலியாக இருக்கும் இடங்கள் நிரப்பப்படும். அதன் பிறகு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

ஆனால் நீதிமன்றத்தில் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை முடிப்பதிலும் பள்ளிக்கல்வித்துறை அலட்சியம் காட்டி வருகிறது. இதனால் காலி பணியிடங்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியாகி, மாணவர்களுக்கான பாடம் நடத்தும் பணிகளும், நிர்வாகப் பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

முன்னதாக, கடந்த வருடம் முழுவதுமே அரசு பள்ளி ஆசிரியர்கள் திமுக தனது வாக்குறுதியில் குறிப்பிட்டவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டங்களில் பல ஆசிரியர்களின் உடல்நிலை மோசமாகி போராட்டத்தின் பொழுது மயங்கி விழுந்த சம்பவமும் நடந்தது. மேலும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு சார்பில் சென்னை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப ஒப்புதல் தர வேண்டும், உயர்கல்வி சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது போல, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு தர வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் கடந்த ஜூன் மாதத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், அரசாணை 243 ஐ ரத்து செய்ய வேண்டும், பதவி உயர்வில் பழைய நிலையிலேயே ஒன்றிய முன்னுரிமை நடைமுறைப்படுத்த வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆனால் திமுக தனது வாக்குறுதியில் கொடுத்தவற்றையும் நிறைவேற்ற வில்லை! அதற்கு பிறகு ஆசிரியர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு நடவடிக்கையை கூட எடுக்கவில்லை! இதனால் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த ஆசிரியர்களும் திமுக மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இவர்களின் அதிருப்தியானது நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலேயே வெளிப்பட்டது. ஏனென்றால் லோக்சபா தேர்தலில் அதிக தொகுதிகளில் திமுகவுக்கு அடுத்த இடத்தை பிடித்த பாஜகவின் ஓட்டு வங்கியை அரசு ஆசிரியர்களின் ஓட்டுகள் தான் உயர்த்தி காட்டியது என்று செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இதே நிலை நீடித்து வந்தால் 2026 தமிழக பொது தேர்தலில் அரசு ஆசிரியர்கள் திமுக மீது கொண்டுள்ள அதிருப்தியை தங்கள் வாக்குகள் மூலம் காட்டுவார்கள் என்று அரசியல் வட்டாரம் முழுவதும் பேசப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News