ரஷ்யவின் தடுப்பூசி ஏகே 47 ரக துப்பாக்கிகளை போல் நம்பகத்தன்மை வாய்ந்தது - புடின்!
By : Shiva
ரஷ்யாவின் தடுப்பூசியான 'ஸ்புட்னிக் லைட்' ஏகே 47 ரக துப்பாக்கிகளை போன்று நம்பகத்தன்மை வாய்ந்தவை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தடுப்பூசி 79.4 சதவிகித செயல் திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்க்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று பரவியவுடன் ரஷ்யா முதன் முதலில் அதற்கு எதிராக தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்தது அதை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. அந்த வரிசையில் தற்போது ஸ்புட்னிக் லைட் என்ற தடுப்பூசியை ரஷ்ய கண்டுபிடித்துள்ளது.
பல்வேறு உலக நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இரண்டு டோஸ்கள் செலுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி ஒரு தடவை செலுத்தி கொண்டாலே போதும் என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசி 79.4% செயல்திறன் கொண்டதாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. இதன் நம்பகத்தன்மை குறித்து ரஷ்யா வெளியிட்ட தகவலில் இது ஏகே 47 ரக துப்பாக்கிகளை போன்று நம்பகத்தன்மை வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் ரஷ்யாவின் இந்த தடுப்பு மருந்து அவற்றை கட்டுப்படுத்த முடியும் என்றால் இதைவிட சிறந்த கண்டுபிடிப்பு வேறு எதுவாக இருக்க முடியும் என்று மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். மேலும் அதன் நம்பகத்தன்மை தன்மையை ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் ஒப்பீட்டு ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏகே 47 ரக துப்பாக்கிகளின் காப்புரிமையை ரஷ்ய அரசு வைத்துள்ளது என்பது நாம் அறிந்த ஒன்றே.