Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி அரசின் அடுத்த டார்கெட்.. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய பயணம்..

மோடி அரசின் அடுத்த டார்கெட்.. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய பயணம்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 Dec 2023 1:56 AM GMT

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் அதிநுண்ம அறிவியல் எனப்படும் நானோ அறிவியல் மகத்தான பங்களிப்பை வழங்கும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். சண்டிகருக்கு அருகிலுள்ள மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவர்களிடையே உரையாற்றிய அவர், வேளாண் நானோ தொழில்நுட்பம், நானோ மருத்துவம், எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல், நானோ மின்னணுவியல் உள்ளிட்டவை நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதை இந்த நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.


இந்த நிறுவனம் அதன் தனித்துவமான மற்றும் இணையற்ற மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் மூலம் அறிவியலை ஊக்குவிப்பதற்கும், நாட்டின் இளைய தலைமுறையினரிடையே தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிறுவனத்தின் ஆசிரியர்கள் நாடு முழுவதும் சுமார் 300 பள்ளிகளில் 15,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அறிவியல் விழிப்புணர்வை பரப்பியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.


தேசத்திற்கான நானோ அறிவியல் அறிவு என்பதே நமது குறிக்கோள் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். நானோ கல்வியை மேம்படுத்துதல், நானோ தொழில்நுட்பத்தின் மேம்பட்ட பயிற்சி மற்றும் ஆய்வக நுட்பங்களை உயர் மட்டத்தில் வழங்குதல், புதுமையான அறிவியல் திட்டங்களை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்தப் பிரிவில் அரசு செயல்படுவதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News