Kathir News
Begin typing your search above and press return to search.

லாக்கப் டெத்:சிவகங்கை அஜித்குமார் வழக்கில் 5 போலீஸார் கைது!

லாக்கப் டெத்:சிவகங்கை அஜித்குமார் வழக்கில் 5 போலீஸார் கைது!
X

SushmithaBy : Sushmitha

  |  1 July 2025 8:25 AM IST

சிவகங்கை மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் அங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் தனியா நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார் இவர் கடந்த ஜூலை 27ஆம் தேதி கோவிலுக்கு வந்த ஒரு பெண்ணின் காரி 10 பவுன் தங்க நகையை திருடியதாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றார்

விசாரணைக்கு அழைத்துச் சென்ற அஜித்குமாரை போலீசார் கடுமையாக தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது கடுமையாக தாக்கி போலீஸ் கஸ்டடியிலேயே ஒருவர் உயிரிழந்த விவகாரம் ஆளும் கட்சியை பதட்டமான சூழ்நிலைக்கு தள்ளியது மேலும் கடந்த நான்கு ஆண்டுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் எதிர்க்கட்சிகள் தரப்பு கடுமையான கேள்விகளை முன்வைத்து வருகிறது அஜித் குமாரை தாக்கி கொலை செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அஜித் குமாரின் உறவினர்கள் போராட்டம் நடத்தி அவரின் உடலையும் வாங்க மறுத்தனர்

இதனை அடுத்து சமரசம் செய்யப்பட்டு அஜித்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி இந்த சம்பவம் தொடர்பாக திருபுவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை காவலர்கள் பிரபு கண்ணன் சங்கர மணிகண்டன் ராஜா ஆனந்த் ராமச்சந்திரன் ஆசி ஆறு பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணி இடை நீக்கம் செய்தார்

அதனைத் தொடர்ந்து அஜித்குமாரின் பெய்த பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இரவு கிடைத்த உடனே எந்த தாமதமும் இன்றி உடனடியாக வழக்கை கொலை வழக்காக சட்டப்பிரிவுகளின் கீழ் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு இதில் தொடர்புடைய ஐந்து காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News