அமெரிக்காவின் 50% வரி விதிப்பு குறித்து உண்மையை உடைத்த செர்ஜி லாவ்ரோவ்!!

By : G Pradeep
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா உட்பட சில நாடுகள் வாங்குவது அமெரிக்காவிற்கு பிடிக்காமல் தொடர்ச்சியாக எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு ஏற்கனவே இருந்த 25% இறக்குமதியே தற்பொழுது 25% மேலும் விதித்து மொத்தம் 50% அமெரிக்கா விதித்துள்ளது.
ஆனால் தற்போது வரை சீனாவிற்கு மட்டும் எந்தவித கூடுதல் வரி விதிக்காமல் உள்ளது. இதைத்தொடர்ந்து தற்பொழுது ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சரான செர்ஜி லாவ்ரோவ் பேட்டி ஒன்று கூறியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதில் அவர் உலகிலேயே மிகவும் தொன்மையான நாடாக சீனா மற்றும் இந்தியா விளங்கி வருகிறது.
அத்தகைய நாட்டிடம் எனக்கு பிடிக்காததை செய்வதை நிறுத்துங்கள்!! இல்லையென்றால் உங்கள் நாட்டின் மீது அதிகமாக வரிவிதிப்பேன் என்று கூறுவது செல்லுபடி ஆகாது என இந்தியா மற்றும் சீனாவிற்கு ஆதரவு அளிப்பது போல பேசியுள்ளார். மேலும் புதுடெல்லி மற்றும் வாஷிங்டனுக்கு இடையில் தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தை அமெரிக்கா புரிந்து கொண்டதாக கூறியுள்ளார்.
இதுபோன்று அமெரிக்கா வணிக ரீதியான அச்சுறுத்தல்களை அழித்து இந்தியா மற்றும் சீனாவை புதிய வர்த்தக பாதையில் கொண்டுபோய் உள்ளதாகவும், இதனால் அந்த நாடுகள் மிகவும் சிரமப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
