Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக சாலை திட்டங்களுக்கு இந்த ஆண்டு ரூபாய் 5000 கோடி ஒதுக்கீடு - மத்திய மந்திரி நிதின் கட்கரி தகவல்!

தமிழகத்தின் சாலை திட்டங்களுக்காக இந்த ஆண்டு ரூபாய் 5000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தமிழக சாலை திட்டங்களுக்கு இந்த ஆண்டு ரூபாய் 5000 கோடி ஒதுக்கீடு - மத்திய மந்திரி நிதின் கட்கரி தகவல்!
X

KarthigaBy : Karthiga

  |  7 Aug 2024 5:15 PM GMT

தமிழகத்தின் சாலை திட்டங்களுக்கு இந்த ஆண்டு ரூபாய் 5000 கோடி வழங்கப்பட உள்ளது என்று, மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி கே ஆர்.என்.ராஜேஷ்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலாக மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இது குறித்து மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி ஆன ராஜேஷ்குமார் கேள்வி நேரத்தில் பேசுகையில், "2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஆனது ரூபாய் 657.53 கோடி. இது தமிழ்நாட்டுக்கு போதுமான நிதி இல்லை. எனவே தமிழகத்திற்கு அனுமதிக்கப்பட்ட தொகையாக சுமார் ரூபாய் 2000 கோடியை நடப்பு நிதியாண்டில் எந்தக் குறையும் காலதாமதமும் இல்லாமல் ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி "தமிழக நெடுஞ்சாலைத் துறைக்கு நிதி வழங்குவதில் நாங்கள் எந்தவித வரையறையும் வைத்திருக்கவில்லை. இரண்டாயிரம் கோடி அல்ல 5000 கோடியை கூட நாங்கள் ஒதுக்க தயாராக இருக்கிறோம். ஏற்கனவே இது குறித்து நாங்கள் பல்வேறு முடிவுகளையும் மேற்கொண்டு உள்ளோம் . இருப்பினும் இது தொடர்பாக நீங்கள் அதற்கான பரிந்துரையையும் நிலம் கையகப்படுத்துதலையும் உறுதி செய்ய வேண்டும். இதை அடுத்து அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்" என்று தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News