Kathir News
Begin typing your search above and press return to search.

சிறிய மீனவ சமூகங்களின் மேம்பாட்டிற்காக சுமார் ரூ.5000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

சிறிய மீனவ சமூகங்களின் மேம்பாட்டிற்காக சுமார் ரூ.5000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!
X

SushmithaBy : Sushmitha

  |  29 Nov 2024 1:18 PM IST

மாநிலங்களவையில் நேற்று 28 நவம்பர் அன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் கடந்த நான்கு நிதியாண்டுகளில் அதாவது 2020-21 முதல் 2023-24 வரை மற்றும் நடப்பு நிதியாண்டான 2024-25 இல் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் சிறிய மீனவ சமூகங்களின் மேம்பாட்டிற்காக ரூ.4969.62 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத்துறை 2020-21ஆம் நிதியாண்டு முதல் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டத்தினை 20,050 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தி வருகிறது மத்திய அரசின் மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக பாரம்பரிய மற்றும் சிறுதொழில் மீனவர்கள் மீன்வளர்ப்போர் மற்றும் மீன்பிடி தொழிலாளர்களின் சமூக உடல் மற்றும் பொருளாதார நிலையை பாதுகாத்து பாரம்பரிய மீன்பிடி மற்றும் மீன்வளம் சார்ந்த தொழில்களை மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றார்

அது மட்டுமின்றி படகுகள் மற்றும் வலைகள் தகவல் தொடர்பு கண்காணிப்பு சாதனங்கள் வாங்குதல் கடல் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல் மீனவர்களுக்கு காப்பீடு வழங்குதல் நவீன மீன்பிடி உபகரணங்களுடன் கூடிய ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்குவதற்கான ஆதரவு கடற்பாசி வளர்ப்பு போன்ற மாற்று வாழ்வாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட மீன்வளம் தொடர்பான வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள பாரம்பரிய மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு பயனாளிகளுக்கு பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் ஆதரவளிக்கிறது என்றும் அலங்கார மீன் வளர்த்தல் திறந்த வெளியில் கூண்டுகளில் மீன் வளர்த்தல் போன்றவை இதில் அடங்கும் மேலும் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் மறுசுழற்சி நீர்வாழ் உயிரி வளர்ப்பு முறை உயிரி மிதவை முறை பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றிற்கு ஆதரவு அளிப்பதுடன் குளிர்பதன சங்கிலி உள்கட்டமைப்பு மற்றும் விற்பனை வசதிகளை உருவாக்குவதற்கான ஆதரவையும் வழங்கி வருகிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் மீன்பிடி தடைக்காலம்/மீன்பிடி பற்றாக்குறை காலங்களில் சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய பாரம்பரிய மீனவ குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆதரவை வழங்குகிறது என தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News