மியான்மருக்கு முதல் உதவிக்கரம் நீட்டிய இந்தியா!அனுப்பி வைக்கப்பட்டது 52 டன் நிவாரண பொருட்கள்!

மியான்மரில் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவை தொடர்ந்து மியான்மருக்கு இந்திய அரசு பலவகையில் உதவி கரம் நீட்டி வருகிறது அந்த வகையில் ஆபரேஷன் பிரம்மா என்ற நடவடிக்கையை தொடங்கி வெளியுறவு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணியாளர்கள் இந்திய ராணுவம் இந்திய விமானப்படை என்டிஆர்எஃப் ஆகியவை இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணத்திற்கான இந்திய கடற்படையின் உடனடி உதவியின் ஒரு பகுதியாக இந்திய கடற்படை கப்பல்களான சத்புரா சாவித்திரி ஆகியவை கடந்த மார்ச் 29ஆம் தேதி யாங்கூனுக்கு புறப்பட்டது மேலும் கர்முக் எல்சியூ 52 ஆகியவையும் நிவாரண நடவடிக்கை களுக்காக யாங்கூனுக்கு இன்று மார்ச் 30 பயணித்துள்ளது
இதைத் தவிர குடிநீர் உணவு அத்தியாவசிய ஆடைகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட சுமார் 52 டன் நிவாரண பொருட்களை இந்தியா மியான்மருக்கு அனுப்பியுள்ளது பிராந்தியத்தில் ஏற்படும் பேரிடர்களின் பொழுது முதலில் உதவும் நாடு என்ற இந்தியாவின் தீர்மானத்திற்கு ஏற்ப இந்திய கடற்படைகள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது