அமெரிக்காவில் பிடிபட்ட 54 ஹரியானா இளைஞர்கள்!! சட்டவிரோத குடியேற்றமா?

By : G Pradeep
ஹரியானாவைச் சேர்ந்த 54 பேர் அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக சென்றதாகவும் அவர்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் திருப்பி இந்தியாவிற்கு அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக கர்னல் மாவட்டத்தின் டிஎஸ்பியான சதீஷ்குமார் பேசியதாவது, உரிய விசா அனுமதி இல்லாமல் அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய ஹரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்களை அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளதாகவும், அந்த இளைஞர்களில் 16 பேர் ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 15 பேர் கைத்தாலை சேர்ந்தவர்கள் என்றும், 8 பேர் யமுனா நகர் மற்றும் குருஷேத்ரா, 5 பேர் அம்பாலா, 3 பேர் சோனிபட், பிறர் பஞ்ச்குலா, பானிபட், ரோத்தக், பதேஹாபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இவர்களை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு கூட்டி சென்ற முகவர்கள் யார் என்பது குறித்து எவரும் புகார் அளிக்காத நிலையில் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணையில் யார் மீதாவது குற்ற பதிவு இருந்தால் அதை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஎஸ்பி சதீஷ்குமார் தெரிவித்தார்.
