Kathir News
Begin typing your search above and press return to search.

ரெப்போ வட்டி வீதத்தை 5.5% லிருந்து 5.25% என குறைத்துள்ளதாக தெரிவித்த சஞ்​சய் மல்கோத்ரா!!

ரெப்போ வட்டி வீதத்தை 5.5% லிருந்து 5.25% என குறைத்துள்ளதாக தெரிவித்த சஞ்​சய் மல்கோத்ரா!!
X

G PradeepBy : G Pradeep

  |  6 Dec 2025 11:44 AM IST

கடந்த 3ம் தேதி நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் 3 நாள் நேற்று முடிந்தது. இதில் இதுவரை இல்லாத அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு பணவீக்​கம் மற்​றும் அமெரிக்க டாலருக்கு எதி​ரான வகையில் குறைந்துள்ள சூழ்நிலையில் 5.5% ரெப்போ வட்டி வீதம் 0.25% குறைந்து 5.25% என அறிவிக்கப்போவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்​சய் மல்​கோத்ரா தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்​கி, வர்த்தக வங்​கி​களுக்கு வழங்கும் கடன் தொகைகளுக்​கான வட்டி விகிதம் ரெப்போ வட்டி வீதம் எனப்படும். இது வீடு, வாகன மற்​றும் தனி​நபர் கடன்​ வாங்குபவர்களின் வட்டி வீதம் குறைப்பு ஆகும்.

இதன் மூலம் பணவீக்​கத்தை கட்டுப்படுத்தவும், வளர்ச்சியை அதிகப்படுத்தி பொருளா​தார நிலைத்​தன்​மை பராமரிக்க ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி வீதத்தை குறைத்துள்ளது. இந்த வட்டி வீதம் குறைவதால் நிரந்தர வைப்பு நிதியின் வட்​டியும் வங்​கி​கள் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News