உறவினர்கள் கூட கைவிட்ட நிலையில் 566 பேருக்கு தற்பணம் கொடுத்த பாஜக அமைச்சர்!
By : Yendhizhai Krishnan
கர்நாடகா மாநில வருவாய் துறை அமைச்சர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் அஸ்தியை கரைத்து தர்ப்பணம் செய்தது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூட செய்யாத காரியத்தை அமைச்சர் செய்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அவற்றை மருத்துவமனையிலேயே விட்டு சென்ற அவலம் பல இடங்களில் நடந்துள்ளது. அதே போல் கர்நாடகாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உடலை உறவினர்கள் வாங்காததால் அவற்றை தானே அடக்கம் செய்வதாக உறுதியளித்த வருவாய் துறை அமைச்சர், அதற்காக சுவாமி பானு பிரகாஷ் சர்மா தலைமையிலான 12 பேர் அடங்கிய ஒரு குழுவை அமைத்தார்.
சொன்னது போலவே இறுதி சடங்குகளை செய்த அமைச்சர், இறந்தவர்களின் ஆத்மாக்கள் நற்கதி அடைய இறுதிச் சடங்குகளை செய்ததில் திருப்தி அடைவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்த செயல் மூலம் தொற்று ஏற்பட்டுவிடும் என்று கொரோனாவால் இறந்தவர்களின் அஸ்தியை கூட வாங்குவதற்கு மக்கள் அச்சம் அடைந்து வருவதை போக்குவதற்காகவே தான் இவ்வாறு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற அஸ்திகள் உரிமை கோரப்படாமல் இருந்தால் அனைத்து மாவட்டங்களிலும் இறுதி சடங்குகளை செய்யுமாறு துணை ஆணையர்களுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்," என்றும் அவர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்து அரசு மயானங்களில் எரியூட்டப்பட்ட அவர்களின் அஸ்திகளை அவர்களது உறவினர்களிடம் சேர்ப்பிக்க முயற்சித்தபோது, அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை அல்லது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது என்றும் எனவே 566 பேரின் அஸ்திகளை கரைத்து இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற தான் முன் வந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.