Kathir News
Begin typing your search above and press return to search.

டிஜிட்டல் மூலம் இந்தியாவின் பணப் பரிமாற்றம் 58.1%... சீனாவிற்கு சவால் விடும் வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா வளர்ச்சி!

டிஜிட்டல் மூலம் இந்தியாவின் பணப் பரிமாற்றம் 58.1%... சீனாவிற்கு சவால் விடும் வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா வளர்ச்சி!
X

SushmithaBy : Sushmitha

  |  18 Jun 2024 12:37 PM GMT

இந்தியாவில் டிஜிட்டல் பரிமாற்றம் வேகமாக அதிகரித்து வருவதாக குளோபல் டேட்டா என்கின்ற தரவு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து குளோபல் டேட்டா என்னும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் ரொக்க பண பரிமாற்றத்திற்கு மாறாக இ-காமர்ஸ் வேகமாக வளர்ந்து வருகிறது.

மேலும் அதில் யு.பி.ஐ, டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் ஆகியவை முக்கிய பங்கு வகுக்கின்றன. அதுமட்டுமின்றி டிஜிட்டல் பணவர்த்தனைகள் அதிகரித்திருப்பதற்கு மொபைல் வாலட்டுகளின் பயன்பாடு அதிகரித்திருப்பதே முக்கிய காரணம். யு.பி.ஐ மூலம் இயக்கப்படும் க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் நிகழ்நேரத்தில் பணமாற்றம் எளிதாக்கப்படுகிறது. இதனால் ஆசிய பசுபிக் சந்தைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை பெரும் வரவேற்பை கண்டு வருகிறது.

இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் சீனா முன்னிலை வகிக்கிறது. அதாவது 2023 ஆம் ஆண்டின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் மொத்தமாக நடந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் கட்டண மதிப்பில் மூன்றில் இரண்டு பங்கு சீனா செய்துள்ளது. இதனால் சீனாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை 65 சதவீதமாக உள்ளது. மேலும் இதே சீனா கடந்த 2018 இல் 53.4 சதவிகிதத்தை கொண்டிருந்தது. அப்பொழுது இந்தியா 20.4 சதவீத டிஜிட்டல் பரிமாற்றத்தை கொண்டிருந்தது. ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் இந்தியா தனது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் அதிக வளர்ச்சியை கண்டு தற்போது சீனாவிற்கு சவால் விடும் வகையில் தனது டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை 58.1% ஆக உயர்த்தி உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : The Hindu Tamil thisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News