Kathir News
Begin typing your search above and press return to search.

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அறநிலையத்துறை தர வேண்டிய வாடகை பாக்கி.. 59 லட்சமா.?

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அறநிலையத்துறை தர வேண்டிய வாடகை பாக்கி.. 59 லட்சமா.?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 Sep 2024 4:40 PM GMT

மதுரை, எல்லீஸ் நகரில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு, அ.தி.மு.க. ஆட்சியில், மண்டல இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் கட்டப்பட்டது. இதற்கு முன், இந்த அலுவலகம் தெற்கு மேற்கு சித்திரை வீதி சந்திப்பில், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்தது. இட பற்றாக்குறையால், 2017 ஆக., 6ல் காலி செய்யப்பட்டது. காலி செய்த போது, வாடகை பாக்கி செலுத்தவில்லை. அறநிலையத் துறையின் கீழ், மீனாட்சி கோவில் நிர்வாகம் இயங்குவதால், அதிகாரிகளும் அதுபற்றி கண்டுகொள்ளவில்லை.


இதற்கிடையே, தற்போது, 2017 முதல் எல்லீஸ் நகரில் இயங்கி வருகிறது. இதன் வாடகை விபரத்தை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தினகரன் என்பவர் கோவில் நிர்வாகத்திடம் கேட்டார். அதற்கு, 59 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி செலுத்த வேண்டும் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. பக்தர்கள் கூறும் போது, கோவில் இடத்தில் கடை வைத்திருப்போர், குடியிருப்போரிடம் வாடகை வசூலிப்பதில் 'கறார்' காட்டும் அறநிலையத் துறை அதிகாரிகள், தங்களது அலுவலகத்திற்கான வாடகையை தராமல் இழுத்தடிப்பது நியாயம் தானா?


இது, வேலியே பயிரை மேய்வது போல உள்ளது. இதனால், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவாய் பாதிக்கப்பட் டுள்ளது. இதே இடத்தை தனியாருக்கு கொடுத்திருந் தால், வாடகை முறையாக வந்திருக்கும். வாடகையையும் உயர்த்தி இருக்கலாம். அறநிலையத்துறை அலுவலகம் என்பதால், கோவில் நிர்வாகம் கேட்க தயங்குகிறது என கூறினார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News